அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியன்களான கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு மற்றும் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர், கடந்த வார இறுதியில் நடைபெற்ற டென்னிஸ் போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை வென்று தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற ஆண்ட்ரீஸ்கு, இத்தாலியின் ரோவெரெட்டோ நகரில் நடைபெற்ற WTA 125 போட்டியின் இறுதிப்போட்டியில் செக் குடியரசின் டொமினிகா சால்கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் அவர் தரவரிசையில் 36 இடங்கள் முன்னேறி 132 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதேவேளை, 2017 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோன் ஸ்டீபன்ஸ், அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலம் எட்மண்டில் நடைபெற்ற ITF W100 போட்டியின் இறுதிப்போட்டியில் 16 வயதான ரஷ்ய வீராங்கனை கிறிஸ்டினா லியுடோவாவை வீழ்த்தி பட்டம் வென்றார்.
இதன் மூலம் அவர் தரவரிசையில் 15 இடங்கள் முன்னேறி 118 வது இடத்தை அடைந்துள்ளார்.
இருவரும் மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் மீண்டும் நுழைவதற்கு மிக அருகில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது











