நாட்டில் மின்னல் எச்சரிக்கை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இன்று காலை 11.30 மணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் நாளை அதிகாலை 1 மணி வரைக்கும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்,சப்ரகமுவ, மத்திய, வடமத்திய,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் குருநாகல்,யாழ்ப்பாணம்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இடி மின்னல் ஏற்படும் வேளைகளில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.











