EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கிளிநொச்சியில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு 10 இலட்சம் ரூபாய் வரை அபராதம்!

கிளிநொச்சியில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு 10 இலட்சம் ரூபாய் வரை அபராதம்!

ஐப்பசி 24, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில், முறையற்ற வகையில் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்காணிப்பு கமராக்கள் மூலம் அடையாளம் கண்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான புதிய திருத்தங்களின் கீழ், முறையற்ற வகையில் குப்பைகளைக் கொட்டுவோருக்கான அபராதம் 10 ஆயிரம் ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் முதல் 10 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2027ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பாலிதீன், பிளாஸ்டிக், மக்கக்கூடிய கழிவுகள் மற்றும் கண்ணாடி ஆகியவற்றைத் தரம் பிரித்தே குப்பைச் சேகரிப்புக்காக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 40 சுகாதாரத் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டிய கரைச்சி பிரதேச சபையில் தற்போது 11 பேர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் ஆளணிப் பற்றாக்குறை குப்பை அகற்றும் பணிகளில் சவால்களை ஏற்படுத்துவதாகவும் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுமக்களும் வணிகர்களும் தங்களது கழிவுகளை முறையாகச் சேமித்து, பிரதேச சபையின் குப்பை அகற்றும் வாகனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார் – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு
அண்மைய செய்திகள்

500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார் – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு

ஐப்பசி 24, 2026
லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான  22 பேர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஐப்பசி 24, 2026
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணை கோரி நவம்பர் 16ஆம் திகதி போராட்டம்!
அண்மைய செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணை கோரி நவம்பர் 16ஆம் திகதி போராட்டம்!

ஐப்பசி 24, 2026
சாவகச்சேரியில் இலவச வாழ்வு நிறைவுப் பராமரிப்பு இல்லம் திறந்து வைப்பு
அண்மைய செய்திகள்

சாவகச்சேரியில் இலவச வாழ்வு நிறைவுப் பராமரிப்பு இல்லம் திறந்து வைப்பு

ஐப்பசி 24, 2026
மன்னார் உணவகங்களில் விசேட சோதனை
அண்மைய செய்திகள்

மன்னார் உணவகங்களில் விசேட சோதனை

ஐப்பசி 24, 2026
கொக்குவில் இந்துக் கல்லூரிப் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்!
அண்மைய செய்திகள்

கொக்குவில் இந்துக் கல்லூரிப் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்!

ஐப்பசி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

யாழ். அரியாலை பகுதியில் பெருமளவான  துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழ். அரியாலை பகுதியில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

4 நாட்கள் முன்னர்
பலாங்கொட கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு –  தேரரிடம் வாக்குமூலம் பதிவு

பலாங்கொட கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு – தேரரிடம் வாக்குமூலம் பதிவு

5 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் புனர்வாழ்வு திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி நிறைவு

கிளிநொச்சியில் புனர்வாழ்வு திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி நிறைவு

1 நாள் முன்னர்
மன்னாரில் இன்று நூலகக் கண்காட்சி ஆரம்பம்

மன்னாரில் இன்று நூலகக் கண்காட்சி ஆரம்பம்

3 நாட்கள் முன்னர்
விசுவமடுவில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு

விசுவமடுவில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check