பிரபல நெட்பிளிக்ஸ் தொடரான ‘Wednesday’ இல் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை ஜென்னா ஒர்டேகா (Jenna Ortega), தொலைக்காட்சி மற்றும் இணையத் தொடர்களில் (TV/Web Series) நடிப்பில் இருந்து தற்காலிகமாக ஒரு இடைவெளி எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் ‘Wednesday’ தொடரின் 3வது சீசன் நிறைவடைந்த நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் ஜோஷ் ஹொரோவிட்ஸின் ‘ஹேப்பி சாட் கன்ஃபியூஸ்டு’ பாட்காஸ்டில் கலந்துகொண்டபோது, ஹாலிவுட்டில் தனது எதிர்காலம் குறித்தும் வித்தியாசமான முடிவு குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக இருந்த காலத்திலிருந்தே அடுத்தடுத்து தொலைக்காட்சித் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருவதால், தற்போது புதிய முயற்சிகளுக்கு இடம் கொடுக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் அவர் முழுநீளத் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.











