ஹட்டனில் கடும் மழை பெய்து வருவதால் அங்குள்ள தனியார் பேருந்து நிலையத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த மண்சரிவால் இரண்டு தனியார் பேருந்துகள் சேதமடைந்துள்ளன.
இந்த சேதத்தை தொடர்ந்து அங்கிருந்த ஏனைய பேருந்துகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.











