நாட்டில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகளைக் கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் மோசடி வழக்கில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பிரதிவாதிகளுக்கு எதிரான அரசுத் தரப்பு சாட்சிய விசாரணை இன்று நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் 29ஆம் திகதி பிரதிவாதிகள் தரப்பை அழைக்குமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக இந்த வழக்கில் 13 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 350 சாட்சிகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு 75 மில்லியன் ரூபா இழப்பீடு செலுத்த உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அதில் 20 மில்லியன் ரூபா ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் சில பிரதிவாதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தின் உரிமையாளர் சுகத் ஜனக பெர்னாண்டோ தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











