பிரேசிலில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரித் தலைவர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றி பெற்ற நிலையில், அந்தத் தேர்தல் முறைகேடாக நடத்தப்பட்டது போல் தோன்றுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை(26.10.2026) கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், எவ்வித ஆதாரங்களையும் முன்வைக்காமல் இக்குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். “நான் எந்தப் பக்கமும் ஆதரவு தெரிவிக்கவில்லை, ஆனால் இது மீண்டும் ஒரு முறைகேடான தேர்தல் போல தோன்றுகிறது.
தேர்தல்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அமைய வேண்டும், ஆனால் இது எனக்கு மிகவும் மோசமாகத் தெரிந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தேர்தலில் தோல்வியடைந்த வலதுசாரி பிரேசில் செனட்டர் ஃப்ளாவியோ போல்சனாரோ தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். இவரது தந்தையான முன்னாள் அதிபர் ஜாமிர் போல்சனாரோ, ட்ரம்ப் பதவியில் இருந்த காலத்தில் அவருடன் நெருங்கிய கூட்டாளியாகச் செயல்பட்டவர் ஆவார்.
அதேவேளை, லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிற பகுதிகளில் அண்மையில் வலதுசாரி வேட்பாளர்கள் பெற்ற தொடர் தேர்தல் வெற்றிகளை ட்ரம்ப்பின் நிர்வாகம் வரவேற்றுப் போற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.











