வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை யாழ்ப்பாண மாவட்டத்தின் 51ஆவது படைப்பிரிவின் புதிய கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் வீரக்கோன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலராக தற்போதைய ஆளுநர் பணியாற்றிய காலத்தில், மேஜர் ஜெனரல் வீரக்கோன் அங்கு பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.











