திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, இன்று அதிகாலை புதூர் சந்தி அருகே வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நால்வர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக, காரை ஓட்டிச் சென்ற சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா கனகராயன்குளம் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.











