EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
தீப்பற்றி எரிந்த ஹூண்டாய் கோனா கார் – 5 மாதங்களாகியும் காரணம் தெரியவில்லை!

தீப்பற்றி எரிந்த ஹூண்டாய் கோனா கார் – 5 மாதங்களாகியும் காரணம் தெரியவில்லை!

கார்த்திகை 13, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஒன்ராறியோவில் பிராண்ட்ஃபோர்டில், வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் கோனா என் (Hyundai Kona N) கார் திடீரெனத் தீப்பற்றி எரிந்த சம்பவம் தொடர்பாக ஐந்து மாதங்களாகியும் காரணம் கண்டறியப்படவில்லை.

இரண்டு குழந்தைகளின் தந்தையான இர்பான் வால்ஜி என்பவருக்குச் சொந்தமான 2023ஆம் ஆண்டு ஹூண்டாய் கோனா என் கார், கடந்த ஜூன் 15ஆம் திகதி நள்ளிரவில் தீப்பற்றி எரிந்துள்ளது.

அண்டை வீட்டாரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து குடும்பத்தினர் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். எனினும், தீ அருகிலிருந்த மற்றொரு காருக்கும் கேரேஜுக்கும் பரவியுள்ளது.

இந்தச் சம்பவத்தால் குடும்பத்தினர் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வால்ஜி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக டிரான்ஸ்போர்ட் கனடா விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. வாகனத் தீ விபத்துகளுக்கான காரணத்தைக் கண்டறிவது கடினமானது என்றும், இயந்திரக் கோளாறு, மின்சாரப் பிரச்சினை அல்லது பராமரிப்புக் குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால் தீ ஏற்படலாம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், சம்பவம் தொடர்பாகத் தங்களுக்குப் போதிய தகவல்கள் கிடைக்கவில்லை என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.

டிரான்ஸ்போர்ட் கனடா வெளியிட்ட தரவுகளின்படி, 2016ஆம் ஆண்டு முதல் 2026 நவம்பர் 3ஆம் திகதி வரை கனடாவில் மொத்தம் 1,150 வாகனத் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 169 சம்பவங்கள் ஹூண்டாய் வாகனங்களுடன் தொடர்புடையவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தனது வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என இர்பான் வால்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நோவா ஸ்கோஷியா பாடசாலைகளில் கைப்பேசிக் கட்டுப்பாடு!
கனடா

நோவா ஸ்கோஷியா பாடசாலைகளில் கைப்பேசிக் கட்டுப்பாடு!

கார்த்திகை 24, 2026
நயாகரா – ரொரோன்டோ  இடையே 11 நிமிட விமானப் பயணம்!
கனடா

நயாகரா – ரொரோன்டோ இடையே 11 நிமிட விமானப் பயணம்!

கார்த்திகை 24, 2026
2025 காட்டுத்தீ அனர்த்தம் – அவசரகால நடவடிக்கைகளை வலுப்படுத்த மனிடோபா அரசுக்கு பரிந்துரை!
கனடா

2025 காட்டுத்தீ அனர்த்தம் – அவசரகால நடவடிக்கைகளை வலுப்படுத்த மனிடோபா அரசுக்கு பரிந்துரை!

கார்த்திகை 24, 2026
ஒட்டாவாவில்  உணவு வங்கியை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கனடா

ஒட்டாவாவில் உணவு வங்கியை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கார்த்திகை 24, 2026
தொலைத்தொடர்பு சேவைக்கு புதிய சட்டக் கோரிக்கை
கனடா

தொலைத்தொடர்பு சேவைக்கு புதிய சட்டக் கோரிக்கை

கார்த்திகை 24, 2026
அல்பர்ட்டாவில் முயல்களிடையே பரவும் வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு!
கனடா

அல்பர்ட்டாவில் முயல்களிடையே பரவும் வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு!

கார்த்திகை 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் மோதல் – மூவர் கைது!

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் மோதல் – மூவர் கைது!

6 நாட்கள் முன்னர்
யாழில் தரையிறங்காது மீண்டும் சென்னைக்கு திரும்பிய விமானம்!

யாழில் தரையிறங்காது மீண்டும் சென்னைக்கு திரும்பிய விமானம்!

22 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ். சாட்டி மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் வழக்கு ஒத்திவைப்பு

யாழ். சாட்டி மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் வழக்கு ஒத்திவைப்பு

7 நாட்கள் முன்னர்
செயற்கை நுண்ணறிவைப் நெறிமுறைகளுக்கு அமைவாக பயன்படுத்த வேண்டும் – வடமாகாண ஆளுநர்

செயற்கை நுண்ணறிவைப் நெறிமுறைகளுக்கு அமைவாக பயன்படுத்த வேண்டும் – வடமாகாண ஆளுநர்

6 நாட்கள் முன்னர்
செம்மணிப் புதைகுழி விவகாரம் – கார்பன் பரிசோதனை தொடர்பில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

செம்மணிப் புதைகுழி விவகாரம் – கார்பன் பரிசோதனை தொடர்பில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check