இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய மாணவர் படையணிகளின் கூட்டு சைக்கிள் பயணமான ‘மைத்திரி சேது யாத்திரை 2027’ இன் இலங்கைக் கட்ட நிறைவு நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.
இலங்கையின் 20ஆவது தேசிய மாணவர் படையணிப் பிரிவு – யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், இந்திய மற்றும் இலங்கை தேசிய மாணவர் படையணிகளின் பிரதிநிதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர் படையணியினர் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.











