EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வசாவிளான் இராணுவ வைத்தியசாலையைப் பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளர்

வசாவிளான் இராணுவ வைத்தியசாலையைப் பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளர்

கார்த்திகை 18, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய வசாவிளான் இராணுவ வைத்தியசாலையை நேரில் பார்வையிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வருகை தந்த பாதுகாப்புச் செயலாளர், முதலில் பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் செயற்பாடுகள், நிர்வாக விடயங்கள், மூலோபாயத் தேவைகள், வழங்கல் ஏற்பாடுகள் மற்றும் படையினரின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து வசாவிளான் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இராணுவ வைத்தியசாலைக்குச் சென்ற பாதுகாப்புச் செயலாளர், அதன் கட்டடத் தொகுதியைப் பார்வையிட்டதுடன் அபிவிருத்திப் பணிகள் குறித்தும் ஆராய்ந்துள்ளார்.

எனினும், குறித்த வைத்தியசாலை அமைந்துள்ள பகுதி உட்பட வசாவிளானில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமது காணிகள் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கும் மக்கள், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வசாவிளான் சந்தியில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், வைத்தியசாலை அமைப்பதற்கு வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் அனுமதி பெறப்படவில்லை எனக் குறிப்பிட்டு, கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு பிரதேச சபையினரும் யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதிக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பாதுகாப்புச் செயலாளரின் யாழ்ப்பாண விஜயத்தின்போது பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்திருந்த காணி உரிமையாளர்களுக்கு, அவ்வாறான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இரணைதீவில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் திட்டம் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

இரணைதீவில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் திட்டம் ஆரம்பம்

கார்த்திகை 18, 2026
நக்கிள்ஸ் குகையில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமியின் கல்விக்கு அரசாங்கம் ஆதரவு!
அண்மைய செய்திகள்

நக்கிள்ஸ் குகையில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமியின் கல்விக்கு அரசாங்கம் ஆதரவு!

கார்த்திகை 18, 2026
இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது – 82 பேர் உயிரிழப்பு!
இலங்கை

இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது – 82 பேர் உயிரிழப்பு!

கார்த்திகை 18, 2026
விசுவமடு தொட்டியடி ஏற்றுநீர்ப்பாசனத் திட்டம் விவசாயிகளிடம் கையளிப்பு!
அண்மைய செய்திகள்

விசுவமடு தொட்டியடி ஏற்றுநீர்ப்பாசனத் திட்டம் விவசாயிகளிடம் கையளிப்பு!

கார்த்திகை 18, 2026
மன்னாரில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பை இடைநடுவே ஒத்திவைத்த தவிசாளர்!
அண்மைய செய்திகள்

மன்னாரில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பை இடைநடுவே ஒத்திவைத்த தவிசாளர்!

கார்த்திகை 18, 2026
சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு
அண்மைய செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

கார்த்திகை 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள்

எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள்

2 நாட்கள் முன்னர்
தேசிய விளையாட்டு விழாவில் சாதனை படைத்த வீராங்கனைக்கான கௌரவிப்பு நிகழ்வு

தேசிய விளையாட்டு விழாவில் சாதனை படைத்த வீராங்கனைக்கான கௌரவிப்பு நிகழ்வு

2 நாட்கள் முன்னர்
காரைநகர் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுப்பு

காரைநகர் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுப்பு

1 நாள் முன்னர்
சிற்றுண்டிகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

சிற்றுண்டிகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

1 நாள் முன்னர்
அளவெட்டியில் நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

யாழ் சிறையில் உயிரிழந்த விளக்கமறியல் கைதி!

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check