தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் மலர் கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் கார்த்திகை வாசம் மலர் கண்காட்சி நல்லூர் கிட்டுப் பூங்காவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை இந்திய வணிகர்கள் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் ஆர். ஆர். தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு, பாடசாலை மாணவர்களுக்கான இலவச மரக்கன்றுகளை வழங்கி வைத்தார்.
இதன்போது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் , தமிழகத்தை சேர்ந்த பசுமைத் தாயகம் அமைப்பின் துணை செயலாளர் ஐநா.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.











