யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் அதனை உற்பத்தி செய்யப் பயன்படுத்திய உபகரணங்களுடன் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை (18.11.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெறுவதாகப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு சட்டவிரோத மதுபானத்தை உற்பத்தி செய்துகொண்டிருந்தவரைக் கைது செய்தனர்.
அத்துடன் அங்கிருந்து ஒரு லீட்டர் 800 மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானம் மற்றும் அதனை உற்பத்தி செய்யப் பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.











