வவுனியா மாவட்டத்தில் அரசியல் கட்சிகளுக்காக தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்ட பலரும் பல்வேறு கண்காணிப்பு குழுக்களில் ஈடுபட்டிருந்தனை அவதானிக்க கூடியதாக இருந்தது.
ஊடகவியலாளர்கள் மற்றும் கட்சி சார்ந்த சிலரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமது முக நூல்களிலும் நேரடியாகவும் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறானவர்கள் தேர்தல் தினத்தன்று தேர்தல் கண்காணிப்பு குழுக்களிலும் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இது தேர்தலில் நியாயமான கண்காணிப்பாக இருக்குமா என்பது தொடர்பில் பலரும் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.











