EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
சுன்னாகம் விபத்து – விசாரணைகளை ஆரம்பித்துள்ள விசேட பொலிஸ் குழு

சுன்னாகம் விபத்து – விசாரணைகளை ஆரம்பித்துள்ள விசேட பொலிஸ் குழு

கார்த்திகை 10, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தினை தொடர்ந்து பொலிஸார் நடந்து கொண்ட விடயம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம் எஸ் எம் ஜருள் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை வான் – மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து வாகன சாரதியின் சாரதி அனுமதி பத்திரத்தினை சிவில் உடையில் நின்ற பொலிஸார் பரிசோதிக்க முற்பட்ட வேளை சாரதிக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது

அதனை தடுக்க சென்ற சாரதியின் மனைவியையும் பொலிஸார் தாக்கியதாகவும் , அவரின் கையில் இருந்த அவர்களின் இரண்டு மாத குழந்தையை பொலிஸார் தட்டி விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தினை அடுத்து நேற்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் நிலையம் முன்பாக மக்கள் கூடியமையால் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

அந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம் எஸ் எம் ஜருள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் , பயணித்த மோட்டார் சைக்கிளிலும் வேன் ஒன்றும் காங்கேசன்துறையில் வீதியில் சுன்னாகம் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளானது.

விபத்தினை அடுத்து , வாகனம் அவ்விடத்தில் இருந்து தப்பி செல்ல முற்பட்ட வேளை , சிவில் உடையில் நின்ற பொலிஸார் வாகனத்தை வழிமறித்து , சாரதியின் சாரதி அனுமதி பத்திரத்தினை கேட்டுள்ளனர்.

சிவில் உடையில் உள்ளவர்களுக்கு தான் சாரதி அனுமதி பத்திரத்தினை தர மாட்டேன் என கூறி தர்க்கப்பட்ட நிலையில் இரு தரப்பினரும் கைக்கலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தரும் , கைகலப்பில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க அவர்களின் உத்தரவில் , விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளில் குற்றவியல் குற்றங்கள் கண்டறியப்பட்டால் , அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை பொலிசாரின் நடவடிக்கைகள் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

பொலிஸார் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே கடமையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு என ஒரு வரையறை இருக்கின்றன. அவற்றினை அவர்கள் மீற முடியாது. மீறினால் நிச்சயமாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

சுன்னாகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட குழுவினரால் பக்க சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபரும் அறிவுறுத்தியுள்ளார். நிச்சயமாக பக்க சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.
அண்மைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.

ஆனி 25, 2026
‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்
அண்மைய செய்திகள்

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

ஆனி 25, 2026
கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!
அண்மைய செய்திகள்

கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!

ஆனி 25, 2026
கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!
அண்மைய செய்திகள்

கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!

ஆனி 25, 2026
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!
அண்மைய செய்திகள்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும் ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

ஆனி 25, 2026
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

2 நாட்கள் முன்னர்
வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கைதான கடற்தொழிலாளர்

வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கைதான கடற்தொழிலாளர்

2 நாட்கள் முன்னர்
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

1 நாள் முன்னர்
யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

4 நாட்கள் முன்னர்
வடக்கில் 9 ‘ஏ’ சித்தி பெற்ற 566 மாணவர்கள்

வடக்கில் 9 ‘ஏ’ சித்தி பெற்ற 566 மாணவர்கள்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In