EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மன்னார்மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்கவும் – செல்வம் அடைக்கலநாதன்

மன்னார்மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்கவும் – செல்வம் அடைக்கலநாதன்

கார்த்திகை 26, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் காணப்படும் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை மீள கையளிக்க கோரி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(26) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் மாவட்டத்தில் உள்ள முள்ளிக்குளம், தலைமன்னார் பியர் பள்ளிமுனை, வங்காலை ஆகிய கிராமங்களில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் காணிகள் இன்னும் அவர்களிடம் இருந்து மக்களுக்கு கை அளிக்க முடியாத நிலையில் உள்ளன.

குறிப்பாக முள்ளிக் குளத்திலுள்ள மக்களின் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புக் காணிகள், தலைமன்னார் பியரில் உள்ள சத சகாய அன்னையின் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சொந்தமான காணிகள், வங்காலை நானாட்டான் வீதியின் ஓரத்தில் உள்ள தனிநபர்களின் காணிகள் மற்றும் பள்ளி முனையில் குடியிருப்புக் காணிகள் ஆகியவை விடுவிக்கப்படாமல் உள்ளது.

முள்ளிக்குளத்தில் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி இக் கிராமத்தில் இருந்து இம்மக்கள் வெளியேற்றப்பட்டனர். 2016 ஆம் ஆண்டு 100 ஏக்கர் விடுவிக்கப்பட்டது. மேலும் 900 ஏக்கர் (04 குளங்கள் கொண்ட விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு நிலங்கள் உட்பட) விடுவிக்கப்படாமல் உள்ளது.

வடமேற்கு கடற்படை தலைமையகம் இந்தப் பகுதிக்குள் நிறுவி இருப்பதால் அவர்கள் விடுவிக்க முடியாத நிலையில் உள்ளனர். தலைமன்னார் பியர் சதா சகாய அன்னையின் ஆலயம் மற்றும் தேவாலயத்தைச் சுற்றியுள்ள நிலமும் படையினர் வசம் உள்ளது.

இந்த நிலமும் ,தேவாலயம் மன்னார் மறை மாவட்டத்திற்கு மறைமாவட்ட ஆயருக்கும் மக்களுக்கு சொந்தமானது. சுமார் 10 ஏக்கர் நிலம் வடமத்திய கடற்படை கட்டளைத் தலைமையகம் இதற்குள் நிறுவப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஞாயிறு வழிபாடுகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிமுனை கடற்படை முகாம் அமைக்கப்பட்ட பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு சொந்தமான காணியாகும். கடற்படையினர் 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் இப்பகுதியில் முகாமிட்டு வசித்து வருகின்றனர்.

வங்காலை நானாட்டான் வீதியில் கடற்படை முகாம் அமைந்துள்ளது. இந்த நிலம் ஒரு தனி நபருக்கு சொந்தமானது. எனவே மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள மக்களின் காணிகளை விடுவித்து மக்கள் தமது சொந்த நிலங்களில் சுதந்திரமாக வாழ வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

ஆனி 23, 2026
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்
அண்மைய செய்திகள்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

ஆனி 23, 2026
பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை
அண்மைய செய்திகள்

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

ஆனி 23, 2026
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

ஆனி 23, 2026
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்
அண்மைய செய்திகள்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

ஆனி 23, 2026
யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும்  போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம்

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

5 நாட்கள் முன்னர்
யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு

யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு

4 நாட்கள் முன்னர்
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

1 நாள் முன்னர்
யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

4 நாட்கள் முன்னர்
மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In