கனடாவில் சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
29 வயதான கெரி பிரின்ஸ் எனும் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.குறித்த நபர் ஒட்டாவா மற்றும் ரொறன்ரோவில் அதிகளவில் தங்கியிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒருநாள் பரோலில் விடுவிக்கப்பட்ட குறித்த நபர் நிபந்தனைகளை மீறி தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடு உடைப்பு, சொத்து கொள்ளை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
ஆறு அடி உயரமான கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த ஆண் இவர் என்பதும் சந்தேக நபரை கைது செய்வதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்