முதன்முறையாக உருவாக்கப்பட்ட குருளைச் சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
முதன்முறையாக யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் குருளைச்சாரணர் களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு முதன்முறையாக உருவாக்கப்பட்ட குருளைச் சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஜனாப் N.ஷாபி அவர்களின் தலைமையில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் யாழ் மாவட்ட சாரணர் ஆணையாளருமான உயர்திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சின்னத்தை சூட்டி வைத்தார்.
அத்துடன் சிறப்பு விருந்தினராக உதவிச்சாரணர் ஆணையாளர் திருமதி.P அருள்சந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்ததுடன்
மேலும் இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள்,அயற் பாடசாலை சாரணர் பொறுப்பாசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர். சங்க உறுப்பினர்கள்,பெற்றோர்கள்,நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்