நாட்டில் இளம் விவசாயிகளை ஊக்குவிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்.மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகாரசபை தலைவர் க.தியாகலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு நாடின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அநுரகுமார திஸாநாயகவிற்கு யாழ்.மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபையின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.











