EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காண்பிக்க வேண்டும்- சி.ஜெனிற்றா

ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காண்பிக்க வேண்டும்- சி.ஜெனிற்றா

புரட்டாதி 28, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார்.

இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளது. இறுதி யுத்தத்தின் போது சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் செல்வீச்சுக்களினாலும் விமான குண்டு தாக்குதலாலும், உடல் சிதறியும், படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இதற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.

மேலும் இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் குடும்பம் குடும்பமாக இடம்பெயரும் போது தங்களது பிள்ளைகளை கையிலே ஒப்படைத்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் பச்சிளங்குழந்தைகளும் ஆயுதம் ஏந்தி போராடியவர்களா? இவர்களுக்கு என்ன நடந்தது.

கடந்த எட்டு தசாப்த காலமாக பதவி வகித்த எட்டு ஜனாதிபதிகளிற்கே யுத்தத்தை நடாத்திய பொறுப்பு இருக்கின்றது. இந்நிலையிலே கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் வீதியிலே போராடிக் கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்கள் மாறுகின்றார்கள், ஆட்சியும் மாறுகின்றது. தற்போது மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்றாலும் கூட அது எந்தவகையில் எமக்கான மாற்றத்தை தரும் என்பது தெரியாது.

சர்வதேச நீதி பொறிமுறைமையை மட்டுமே நாம் இன்று வரை நம்பியிருக்கின்றோம். குறிப்பாக உள்ளக முறையில் எந்தவித நம்பிக்கையும் இல்லாத காரணத்தினால் நாங்கள் சர்வதேச நீதிக்காகவே இதுவரை போராடிக் கொண்டிருக்கின்றோம்.

300க்கு மேற்பட்ட தங்களது பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் போராடிக்கொண்டிருந்த தாய் தந்தையரை இழந்த நிலையிலும் அவர்களின் ஏக்கத்திற்காகவும் நாம் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றோம்.

இலங்கையில் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுபவர்களிற்கு ஒரு வேண்டுகோளினை விடுக்கின்றோம். எமது உறவுகள் எத்தனை பச்சிளங் குழந்தைகளையும், பாடசாலை மாணவர்களையும் இழந்து அவர்கள் மீண்டும் வருவார்களா என்ற ஏக்கத்துடனும் தவிப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை உங்கள் பிள்ளைகளாக நேசியுங்கள்.

எனவே சர்வதேச சிறுவர் தினமான ஒக்ரோபர் 1ம் திகதி அன்று வடக்கு கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளோம். அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 10.00 மணிக்கு குறித்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். எனவே இப்போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இலங்கை அரசானது 75 வருடகாலமாக தமிழ் மக்களை ஏமாற்றி இருந்தது. பரம்பரை பரம்பரையாக 08 ஜனாதிபதிகள் மாறி மாறி ஆட்சி செய்திருந்த நிலையிலே எங்களுக்கு எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை. எனவே எந்த நிலையிலும் எந்த ஒரு அரசையும் நம்பவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக சர்வதேச பொறிமுறையின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக் கொடுத்து மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் நிலையில் புதிய ஜனாதிபதியை பற்றி யோசிக்க முடியும்.

எந்த ஜனாதிபதி வந்தாலும் எமக்கான தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என்பதையே சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கிறோம். எனவே புதிய ஜனாதிபதி ஏதாவது ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு
அண்மைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

மார்கழி 11, 2025
அமெரிக்க உப இராஜாங்க செயலாளர் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்!
இலங்கை

அமெரிக்க உப இராஜாங்க செயலாளர் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்!

மார்கழி 11, 2025
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்  கைது
அண்மைய செய்திகள்

யாழ். பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மார்கழி 11, 2025
தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது
அண்மைய செய்திகள்

தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது

மார்கழி 11, 2025
தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் – இளங்குமரன் உறுதியளிப்பு
இலங்கை

தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் – இளங்குமரன் உறுதியளிப்பு

மார்கழி 11, 2025
முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
இலங்கை

முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

மார்கழி 11, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதன பொருட்கள்

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதன பொருட்கள்

7 நாட்கள் முன்னர்
தெஹிவளையில் சற்று முன்  துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

தெஹிவளையில் சற்று முன் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

5 நாட்கள் முன்னர்
கோமா நிலைக்கு சென்ற யாழ் சிறைச்சாலை கைதி

கோமா நிலைக்கு சென்ற யாழ் சிறைச்சாலை கைதி

7 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயாளி ஒருவர் அடையாளம்

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயாளி ஒருவர் அடையாளம்

7 நாட்கள் முன்னர்
யாழில் அதிரடிப் படையினரால் வீடு ஒன்று முற்றுகை!

யாழில் அதிரடிப் படையினரால் வீடு ஒன்று முற்றுகை!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In