நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வன்னி தேர்தல் மாவட்டத்தின் முல்லைத்தீவு தொகுதியில் உள்ள வாக்கெடுப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் நாளை (13) காலை 7.30 மணி முதல் அனுப்பி வைப்பதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவு தொகுதியில் 137 வாக்கெடுப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 86889 ஆகும்.
தேர்தல் பணிகள் நடைபெறும் இடங்களை தயார் செய்தல், டெங்கு நுளம்புகள் இருந்தால் அந்த இடங்களை சுத்தம் செய்தல், சுகாதார வசதிகள் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாளை காலை வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் மற்றும் ஆவணங்கள் அனுப்பப்படும் இடங்கள் தயார் நிலையில் காணப்படுகிறது.