நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பல வாக்காளர்கள் தங்களுடைய வாக்கை பதிவு செய்யவில்லை. சுமார் ஒரு இலட்சம் தனியார் துறை ஊழியர்கள் விடுமுறை இல்லாததால் வாக்களிக்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேர்தலுக்கான விடுமுறையை பல தனியார் நிறுவனங்கள் வழங்காததால் ஒரு இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை என தேர்தல் கண்காணிப்பாளர்கள் அனுமானிக்கின்றனர்.
விடுமுறை வழங்காதது குறித்து 12 நிறுவனங்களின் ஊழியர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.