வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலய மாணவர்கள் அகில இலங்கை கர்நாடக சங்கீத பல்லிய வாத்திய பிருந்தா போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.
இப் போட்டியானது கடந்தவாரம் திருகோணமலை சிறி கோணஸ்வரா இந்துக் கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.தேசிய ரீதியில் இடம்பெற்ற இவ் சங்கீத பல்லிய வாத்திய பிருந்தா போட்டியில் வவுனியா வடக்கு வலயம் சார்பாக பங்குபற்றிய தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயம் வரலாற்றில் முதற் தடவையாக முதலாம் இடம்பெற்றுள்ளது.
மிகவும் பின்தங்கிய கிராமப்புறத்திலுள்ள இப்பாடசாலையில் ஆரம்பத்தில் இசை வாத்தியங்கள் பற்றிய முன்னைய அனுபவமோ பயிற்சியோ இல்லாத நிலையில் பன்னிரெண்டு மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட கடும் பயிற்சியின் மத்தியில் இவ் வெற்றி பெறப்பட்டுள்ளது.