2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதோடு அது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் (06) நடைபெறவுள்ளது.
அத்துடன் இன்று காலை 09.30 முதல் மாலை 05.30 நடைபெறவுள்ள அமர்வில் அரசியலமைப்பின் கீழான தீர்மானம் (2025)ஆம் ஆண்டுக்கான கணக்கு வாக்குப்பணம்) மற்றும் 12 குறை நிரப்பு மதிப்பீடுகள் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் 4 மாதங்களுக்கும், தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் அரச சேவைகளை பராமரிக்க தேவையான நிதி இந்த இடைக்கால கணக்கறிக்கை மூலம் ஒதுக்கப்படவுள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.