EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
தனது 15 வருட காதலனை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ்…

தனது 15 வருட காதலனை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ்…

மார்கழி 13, 2024
வகை: சினிமா
A A
Share on FacebookShare on Twitter

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 32வது வயதில் இன்று கோவாவில் திருமணம் செய்துக் கொண்டார். 1992ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி பிறந்தவர் கீர்த்தி சுரேஷ். நடிகை மேனகாவுக்கும் இயக்குநர் சுரேஷுக்கும் மகளாக பிறந்தார். கேரளாவில் வளர்ந்து வந்த கீர்த்தி சுரேஷ் 2000ம் ஆண்டு வெளியான பைலட்ஸ் எனும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் மோகன்லாலின் கீதாஞ்சலி படத்தில் நடித்தார். ரிங் மாஸ்டர் படத்தில் நடித்த பின்னர் 2014ம் ஆண்டு தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தில் அறிமுகமானார்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் ஹிட் அடித்த நிலையில், அவருடன் இணைந்து ரெமோ, சீமராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுஷ் உடன் தொடரி, விஷால் உடன் சண்டக்கோழி 2, விஜய்யுடன் பைரவா, சர்க்கார், சியான் விக்ரமுடன் சாமி ஸ்கொயர், ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த, ஜெயம் ரவியுடன் சைரன், உதயநிதி ஸ்டாலின் உடன் மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவில் தனது திருமணத்தை நடத்தாமல் ட்ரீம் வெட்டிங்காக கோவாவில் இந்து முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். 15 ஆண்டுகளாக நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஆண்டனி தட்டிலை காதலித்து வந்ததை படு ரகசியமாக வைத்திருந்ததே பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது.

நடிகை கீர்த்தி சுரேஷ் ஆண்டாள் போல அழகாக திருமண கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் தனது காதல் கணவர் தாலி கட்டுவதை ரசித்து பார்த்து சிரிக்கும் காட்சியை சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் சிலாகித்துக் கொண்டாடி வருகின்றனர். சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் இந்தியில் இப்போதுதான் அறிமுகமாகி உள்ளார் அதற்குள் திருமணம் செய்துக் கொண்டாரே என ரசிகர்கள் சற்றே அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர்.

அட்லீ தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், வருண் தவான், வாமிகா கபி நடிப்பில் உருவாகி உள்ள பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தின ரிலீஸாக வெளியாகிறது. தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த படம். சமந்தா தமிழில் நடித்த டாக்டர் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு’ – பராசக்தி டிரெய்லர்
சினிமா

என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு’ – பராசக்தி டிரெய்லர்

தை 4, 2026
நாளை வெளியாகும் ஜனநாயகன் ட்ரெய்லர்
சினிமா

நாளை வெளியாகும் ஜனநாயகன் ட்ரெய்லர்

தை 2, 2026
கோடை விடுமுறைக்கு வரும் “மகுடம்”
சினிமா

கோடை விடுமுறைக்கு வரும் “மகுடம்”

தை 1, 2026
நடிகை வரலக்ஷ்மி இயக்கம் சரஸ்வதி திரைப்படம்
சினிமா

நடிகை வரலக்ஷ்மி இயக்கம் சரஸ்வதி திரைப்படம்

மார்கழி 30, 2025
அரசன் படத்தில் இணையும் ஆண்ட்ரியா
சினிமா

அரசன் படத்தில் இணையும் ஆண்ட்ரியா

மார்கழி 18, 2025
இளமை காலத்திற்கு செல்லும் சிவகார்த்திகேயன்
சினிமா

இளமை காலத்திற்கு செல்லும் சிவகார்த்திகேயன்

மார்கழி 9, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள  புதிய சட்டமூலம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள புதிய சட்டமூலம்

9 மணத்தியாலங்கள் முன்னர்
பிரதமருக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

பிரதமருக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

9 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வு சர்ச்சை

யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வு சர்ச்சை

3 நாட்கள் முன்னர்
மிளகாய் வகைகளின் விலை அதிகரிப்பு

மிளகாய் வகைகளின் விலை அதிகரிப்பு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In