முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட கள்ளியடி பகுதியில், பேராற்றில் நீராடச் சென்ற 20 வயதுடைய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதுக்குடியிருப்பு, 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்றபோதே குறித்த இளைஞன் நீரில் மூழ்கியுள்ளார். பின்னர், அவரது சடலம் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.











