பால்நிலை சமத்துவ தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் வேலைத் திட்டம் இன்று யாழ்ப்பாணம் கொக்குவிலில் முன்னெடுக்கப்பட்டது.
பால்நிலை சமத்துவம் தொடர்பாக மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வு இதுவரை இல்லை என்பதை கருத்தில் கொண்டு யாழ்.பிராந்திய மனித உரிமை பணிப்பாளர் த.கனகராஜ் தலைமையில் குறித்த விழிப்புணர்வு கருத்திட்டம் இன்று நடாத்தப்பட்டது.
இதன் போது பெண்கள், ஆண்கள் வயோதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு வயதினரையும் உள்வாங்கி இலங்கையிலே குறிப்பாக வடமாகாணத்திலே பாலியல் சமத்துவம் எவ்வாறு பேணப்படுகிறது அதற்கான முக்கியத்துவம் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது.











