இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 19ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது
குறித்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதைத் தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ், டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளிடம் தோல்வியைத் தழுவியது.
அத்துடன் தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, அடுத்த 2 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலெஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளை வீழ்த்தியது.
இந்தநிலையில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணியும், தொடர் தோல்விக்கு முற்றிப்புள்ளிவைக்கும் முனைப்புடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று களமிறங்கவுள்ளன