தனது வாடிக்கையாளரை கொலை செய்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ரோஜெலியோ பாகபுயோ க்கு எதிராக 60 சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் காவல்துறை இந்த சான்றுகளை கம்லூப்ஸ் நீதிமன்றுக்குச் சமர்ப்பித்துள்ளது.
ஓரு கூரான கத்தி, 12 இஞ்ச் சவர அலகு, சவள் கருவி முதலியவை இச்சான்றுகளுக்குள் உள்ளடங்குகின்றன.
தனது வாடிக்கையாளராக இருந்த தாம்சன் ரிவர்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பேராசிரியர் மொஹ்த் அப்துல்லாவை, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொலை செய்தார் என சட்டத்தரணி ரோஜெலியோ பாகபுயோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட பட்ஜெட் வேனின் வாடகை ஆவணங்கள் முதல் சான்றாக சமர்ப்பிக்கப்பட்டன.
டுஃபெரின் (Dufferin) பகுதியில் அந்த வேன் கைவிடப்பட்டிருந்தமை நீதிமன்றுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.
பிற சான்றுகளில் ஒரு பெரிய கருப்பு சேமிப்பு பை, கயிறுகள், தீப்பெட்டிகள், கேபிள்கள் மற்றும் துளைகள் வெட்டப்பட்ட கருப்பு குப்பை பைகள் ஆகியவை அடங்குகின்றன.