கியூபெக் மாகாணத்தின் புரோசார்ட் நகரில் வீடற்ற ஒரு பெண்ணை மோதி படுகாயப்படுத்திய விபத்து தொடர்பில் கைதான 46 வயது ஆடவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து கடந்த மாதம் இடம்பெற்றது.
இந்த வழக்கில் பிரதிவாதியான லூயிஜி ஃப்ராகோமெலே என்பவர் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கக்கூடியவர் என்பதால் பிணை வழங்க மறுத்த நீதிபதி ஜீன்-பிலிப் மார்கோக், திங்கள்கிழமை தனது முடிவை அறிவித்தார்.
நீதிமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னரே, நீதிபதி தனது தீர்ப்பை வெளியிட்டார்.
பிரதிவாதி ஃப்ராகோமெலே, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரசுத் தரப்பு வாதிட்டது
அரசுதரப்பின் வாதத்தினைச் செவிமடுத்த நீதிபதியும் அதற்கு உடன்பட்டார்.
ஃப்ராகோமெலே மீது “அபாயகரமான ஓட்டுநர்,” “ஆயுதத்தால் தாக்குதல்”, “விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடியது,” மற்றும் “சேதம் விளைவித்தது” போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.