EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மேலைத்தேய கலாசார நடவடிக்கைகள் எமது பிரதேசங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிப்பு !

மேலைத்தேய கலாசார நடவடிக்கைகள் எமது பிரதேசங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிப்பு !

ஆனி 10, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மேலைத்தேய கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை எமது சிறுவர்கள் மீது திணிக்க முற்படும் இரகசிய குழுக்களால் பணம் வழங்கப்படும் ஓர் இரகசிய நிகழ்ச்சி நிரல் காணப்படுவதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் “சுயமரியாதை நடை – 2025” எனும் தொனிப்பொருளில் நடைபவனி ஒன்று இடம்பெற்றது.

அது தொடர்பில் கீதநாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தனி நபர்களோ,அமைப்புகளோ தமது உரிமைகளுக்காக குரல் எழுப்ப முடியும் எனினும் அவர்கள் தமிழ் மக்களின் கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை, குறிப்பாக புனிதத் தலங்களுக்கான இடங்களில் மதிக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

யாழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் நாடு முழுவதுமான மற்றும் உலகளாவிய ரீதியிலான பக்தர்களின் புனிதத் தலமாக விளங்கும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக ஓரினச் சேர்க்கை மற்றும் அது சார்ந்த தமது நம்பிக்கைகளை ஒரு குழு விளம்பரப்படுத்தும் செயல் அதிர்ச்சிகரமானதும் வெட்கக்கேடானாதுமாகும்.

இந்த செயற்பாடானது முழுக்க முழுக்க தமிழ்க் கலாசாரத்துக்கு எதிரான ஒன்றாகவே பார்க்க வேண்டும் என்பதுடன் குறித்த செயற்பாடுகளை அரங்கேற்றும் குழுக்களுக்கு மேலைத்தேய கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை எமது சிறுவர்கள் மீது திணிக்க முற்படும் இரகசிய குழுக்களால் பணம் வழங்கப்படும் ஓர் இரகசிய நிகழ்ச்சி நிரல் காணப்படுகின்றது.

அண்மையில் நல்லூர் புனிதப் பிரதேசத்தில் மாமிச உணவுகளை விற்பனை செய்யும் ஓர் உணவகம் ஒன்றிற்கு எதிராக அனைத்து தரப்பினரும் குரல்கொடுத்ததன் காரணமாக குறித்த உணவகம் சைவ உணவினை பரிமாறும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.

எனினும் குறித்த உணவகத்திற்கு எதிராக குரல் எழுப்பிய அனைவரும் தமிழ் கலாசாரம் சீரழிக்கப்படும் இவ்விவகாரத்தில் மெளனம் காப்பது வருத்தமளிக்கிறது.

குறித்த மேலைத்தேய கலாசார நடவடிக்கைகள் எமது கலாசார மற்றும் புனிதப் பிரதேசங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் தமது உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் இக்குழுவினரும் ஒரு சமூகத்தின் கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை மதிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இது போன்ற கலாசார சீரழிவு நடக்கும் பொழுது நாம் மௌனித்து இருக்க நாம் எந்த ஒரு அமைப்பிடமும் விலை போகவில்லை.

தமிழ் கட்சிகள் இதனை கண்டிக்க தவறினால் எமது அடுத்த தலைமுறை சீர்கெட்டு விடும்.

உண்மையான மற்றும் உணர்வுபூர்வமான மாற்றுப்பாலினத்தவர்கள் வானவில் சமூகத்துடைய செயற்பாடுகளுக்கு அப்பால் இருந்துவருவதே நிதர்சனமாகும் எனும் நிலையில், இ‌‌ந்த சீர்கேட்டை கண்டிக்கத் தவறிவிட்டு உணவகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது அர்த்தமற்ற ஒரு செயற்பாடாகும் – எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை
அண்மைய செய்திகள்

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை

ஆனி 27, 2026
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!
அண்மைய செய்திகள்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டில் ‘இன்செல்’ கருத்தியல் தீவிரவாதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

ஆனி 27, 2026
ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.
அண்மைய செய்திகள்

ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.

ஆனி 27, 2026
‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்
அண்மைய செய்திகள்

‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்

ஆனி 27, 2026
‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.
அண்மைய செய்திகள்

‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.

ஆனி 27, 2026
அண்மைய செய்திகள்

ஆனி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்த நீதி அமைச்சர்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்த நீதி அமைச்சர்

7 நாட்கள் முன்னர்
கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!

கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!

3 நாட்கள் முன்னர்
கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை

19 மணத்தியாலங்கள் முன்னர்
கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!

கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!

3 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In