ஸ்பெயின் நாட்டின் புவெர்ட்டோ டி லா குரூஸ் பகுதியில் பலர் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது இராட்சத அலையில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதடன் மூவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இராட்சத அலையில் சிக்கி பாறையில் மோதிய 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அந்த கடற்கரை மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.











