EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
அமைச்சர் பிமல் ரத் நாயக்கவிடம் கோரிக்கை விடுத்த ரிஷாட் பதியுதீன்

அமைச்சர் பிமல் ரத் நாயக்கவிடம் கோரிக்கை விடுத்த ரிஷாட் பதியுதீன்

ஆடி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் பிரதேசத்திலிருந்து மறிச்சிகட்டி பூக்குளம் ஊடாக பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறக்க பக்தர்களின் நலன் கருதி திறந்து கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் விமல் ரத்நாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தையும் வட மாகாணத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த கத்தோலிக்க தமிழ் பேசும் மக்கள் நீண்ட காலமாக பள்ளங்கண்டல் ஆலயத்தின் மத நிகழ்வுகள் மற்றும் திரு விழாக்களில் பங்கேற்று வருவதாக ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தற்போது மன்னார் – பூக்குளம் வழியாக பள்ளங்கண்டல் ஆலயத்தை சென்றடையும் முக்கிய பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பக்தர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கொண்டச்சி, முள்ளிக்குளம் உள்ளிட்ட ஆலயத்தை அண்மித்த பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது மதக் கடமைகள் மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு இந்தப் பாதை மிக முக்கியமானதாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்பாதை மூடப்பட்டுள்ளதால் வயோதிபர்கள், பெண்கள் மற்றும் தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கூடுதல் தூரம் பயணிக்க வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தமது பிரதேச மக்களின் பிரதிநிதி என்ற வகையில் பல்வேறு தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றை கருத்தில் கொண்டு பக்தர்களின் நலன் மற்றும் மத உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் பாதையை மீளத் திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பல தசாப்தங்களாக மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கி வரும் பள்ளங்கண்டல் ஆலயத்தை நோக்கிச் செல்லும் இந்தப் பாதை மீண்டும் திறக்கப்படுவது, அப்பகுதி மக்களின் மத சுதந்திரத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக அமையும் எனவும் ரிஷாத் பதியுதீன் தனது வேண்டுகோளில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பக்தர்களின் போக்குவரத்து வசதியை உறுதிப்படுத்துவதோடு, பிராந்திய மக்களின் மத மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு தடையில்லா அணுகலை வழங்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாட்டில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

நாட்டில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆடி 6, 2026
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆடி 6, 2026
நீர் கொழும்பு சிறைச்சாலையில் மோதல் – 25 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

நீர் கொழும்பு சிறைச்சாலையில் மோதல் – 25 பேர் உயிரிழப்பு

ஆடி 6, 2026
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல்  அழைப்பு
அண்மைய செய்திகள்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல் அழைப்பு

ஆடி 6, 2026
தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்
அண்மைய செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்

ஆடி 6, 2026
இடைக்கால கட்டளை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்
அண்மைய செய்திகள்

இடைக்கால கட்டளை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்

ஆடி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவோம் – கடற்தொழில் அமைச்சர்

பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவோம் – கடற்தொழில் அமைச்சர்

5 நாட்கள் முன்னர்
கியூபெக்கில் நுகரப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் (Renewable Energy) பங்கீட்டை எதிர்வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் 77 சதவீதமாக உயர்த்துவதற்கான திட்டம்

கியூபெக்கில் நுகரப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் (Renewable Energy) பங்கீட்டை எதிர்வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் 77 சதவீதமாக உயர்த்துவதற்கான திட்டம்

5 நாட்கள் முன்னர்
யாழ்.மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணம் – தெல்லிப்பளை மற்றும் உடுவில் பிரதேச செயலகங்கள் முதலிடம்

யாழ்.மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணம் – தெல்லிப்பளை மற்றும் உடுவில் பிரதேச செயலகங்கள் முதலிடம்

1 நாள் முன்னர்
வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

3 நாட்கள் முன்னர்
தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்

5 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In