EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

ஆடி 8, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச மாநாட்டினை நடாத்தவுள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப்பகுதிகளிலும், தமிழர் என்கிற அடையாளத்தோடு இலங்கைத் தீவின் அனைத்து பாகங்களிலும் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் அரச படைகளாலும், துணை ஆயுதக்குழுக்களாலும் கடத்தப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட பின்னர் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமலாக்கப்படுள்ளனர். இந்தத் துயர் தோய்ந்த வரலாறு 1948 ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. வகைதொகையற்ற கணக்கில் தமிழ் இளையவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்றோ, அதற்கான பொறுப்புக்கூறலையோ வெளிப்படுத்தாத இலங்கை அரசு, இந்த விடயத்தில் பல தசாப்தங்களாக மௌனம் சாதித்து வருகிறது.

விசாரணை என்ற பெயரில் திருடனே குற்றவாளியை தேடும் படலத்தை அரசு அரங்கேற்றி வருகின்றது. நீதி கோரும் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டங்கள் குறித்த பலத்த எதிர்ப்பையும், அதிருப்தியையும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் வெளிப்படுத்தியே வந்திருக்கின்றோம்.

இப்போது ஆட்சிபீடத்திலிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஏனைய அரசுகளைவிட மிகத் தந்திரோபாயமாக எமது விடயத்தை கையாள்வதை அவதானிக்கிறோம். தெற்கில் தமது சிங்கள இளைஞர்களும் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கில் தமிழ் இளையோரும் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

எனவே தெற்கோடு கைகோர்த்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்கின்றனர். அடிப்படையில் அறமற்ற இந்த வாதம், எமது கண்ணீரை விலை பேசுகிறது.

எமது பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு நாம் நட்ட ஈட்டையோ அல்லது அரச வேலை வாய்ப்புக்களையோ பெற்றுக்கொண்டு மரணச் சான்றிதழில் கையெழுத்திட தயாரில்லை ஆனால் தெற்கு அதனை எப்போதோ செய்துவிட்டது. நாம் எமது பிள்ளைகள் எங்கே என்றே கேட்கிறோம். அதற்கான நீதியைதான் கூறுகின்றோம்.

எமக்கு முன்னால் செம்மணி போன்ற மனிதப் புதைகுழிகளைக்காட்டி, கடந்த காலங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம்.

எனவே அரசு வழங்கும் மிகப்பெரிய நட்ட ஈட்டுத்தொகையை பெற்றுக்கொள்ளுங்கள் என்பதை நோக்கி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய எம்மை தள்ளிவிடும் உளவியல் போரை இந்த அரசு நடத்தி வருகின்றது.

நீதிகோரி நீண்டகாலம் நாம் நடத்தி வரும் போராட்டம் காரணமாக இதுவரை 400 இற்கும் மேற்பட்ட தாய், தந்தையர் நீதி கிடைக்காமலே இறந்துவிட்டனர். அவர்களின் இறப்பின் பின்னர் காணாமலாக்கப்பட்டவரை தேடும் வீச்சும் அருகிவருகிறது.

இவ்வாறானதொரு நிலையில் தான் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை அரசின் பொறிமுறைகளை நிராகரித்து சர்வதேச நீதியைக் கோரும் நிகழ்வாக இவ்வருட சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை அனுஷ்டிக்கவுள்ளோம். அதற்காக உங்கள் அனைவரின் ஆதரவினையும் எதிர்பார்த்திருக்கிறோம்.

அரசியல் கட்சி பேதமின்றி அனைவரும் பங்கேற்பதுடன் பொது மற்றும் சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு விளக்கமறியல்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு விளக்கமறியல்

ஆடி 8, 2026
மன்னாரில் காணி இன்றி துன்பப்படும் 35 குடும்பங்கள்
அண்மைய செய்திகள்

மன்னாரில் காணி இன்றி துன்பப்படும் 35 குடும்பங்கள்

ஆடி 8, 2026
பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்
அண்மைய செய்திகள்

பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

ஆடி 8, 2026
வடக்கு மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான புதிய திட்டம்
அண்மைய செய்திகள்

வடக்கு மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான புதிய திட்டம்

ஆடி 8, 2026
வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்
அண்மைய செய்திகள்

பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துசென்ற ஒருவரை மோதித்தள்ளிய இரு வாகனங்கள்

ஆடி 8, 2026
யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்
அண்மைய செய்திகள்

யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்

ஆடி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

கச்சதீவில் சுகாதர சீர்கேட்டுடன் உணவு விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

கச்சதீவில் சுகாதர சீர்கேட்டுடன் உணவு விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

3 நாட்கள் முன்னர்
வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துசென்ற ஒருவரை மோதித்தள்ளிய இரு வாகனங்கள்

6 மணத்தியாலங்கள் முன்னர்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

4 நாட்கள் முன்னர்
மாரவில பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன்

மாரவில பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன்

1 நாள் முன்னர்
120 பந்தய புறாக்களை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர்

120 பந்தய புறாக்களை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In