EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு விளக்கமறியல்

ஆடி 8, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 13 வயது சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜ.ஆர்.சி பட்டியலில் உள்ள பிரபல போதை பொருள் வியாபாரியான 31 வயதுடையவரை எதிர்வரும் 20 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று புதன்கிழமை (8) உத்தரவிட்டார்.

குறித்த நபரின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வீட்டில் வசித்து வரும் 13 வயது 4 மாதங்களை கொண்ட சிறுமியின் தந்தை மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்கு சென்று மனைவி பிள்ளைகளுடன் தகராறு காரணமாக குறித்த சிறுமியை தாய் தந்தை ஒழுங்காக பராமரிக்காத நிலையில் சிறுமி சில சமயம் உறவினரான ஜ.ஆர்.சி வீட்டிற்கு சென்று தங்கி வருவது வழமை.

இந்நிலையில் சம்பவ தினமான 6ம் திகதி திங்கட்கிழமை இரவு குறித்த நபரின் தாயாருடன் அங்கு நித்திரைக்கு சென்றுள்ளார். இதன்போது நள்ளிரவு 12 மணிக்கும் அதிகாலை 2 மணிக்கும் இடையில் சிறுமியை தன்னுடன் வருமாறு குறித்த நபர் கேட்டபோது சிறுமி பயந்து அலற முற்பட்டபோது சிறுமியின் வாயை கைகளால் மூடி சிறுமியை தூக்கி சென்று வீட்டிற்கு பின்பகுதியிலுள்ள பாழடைந்த காணி ஒன்றின் கம்பி வேலியால் சிறுமியை தூக்கி விட்டுவிட்டு குறித்த நபர் கம்பி வேலியை கடக்க முற்பட்ட போது சிறுமி அங்கிருந்து தப்பி ஓடி சத்தமிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுமியை மீண்டும் பிடித்து வாயை மூடி குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொண்டதையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் பெற்றோர் குறித்த நபரின் உறவினர் என்பதால் அதனை மூடி மறைத்ததுடன் பொலிசாருக்கு புகார் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

இதனையறிந்த அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் 1195 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்ததையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கஜநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (7) இரவு குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே போதைப்பொருள் வியாபாரம் உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளி வந்துள்ளதுடன் பொலிசாரின் நாட்டில் குற்றவாளிகள் உள்ள குற்றவாளிகள் பட்டியலான ஜ.ஆர்.சி பட்டியலில் சேர்க்கப்பட்ட குற்றவாளியான குறித்த நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (8) ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 20 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

மன்னாரில் காணி இன்றி துன்பப்படும் 35 குடும்பங்கள்
அண்மைய செய்திகள்

மன்னாரில் காணி இன்றி துன்பப்படும் 35 குடும்பங்கள்

ஆடி 8, 2026
பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்
அண்மைய செய்திகள்

பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

ஆடி 8, 2026
வடக்கு மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான புதிய திட்டம்
அண்மைய செய்திகள்

வடக்கு மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான புதிய திட்டம்

ஆடி 8, 2026
தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
அண்மைய செய்திகள்

தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

ஆடி 8, 2026
வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்
அண்மைய செய்திகள்

பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துசென்ற ஒருவரை மோதித்தள்ளிய இரு வாகனங்கள்

ஆடி 8, 2026
யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்
அண்மைய செய்திகள்

யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்

ஆடி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல்  அழைப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல் அழைப்பு

2 நாட்கள் முன்னர்
மொன்றியல் லஷின் கால்வாயில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மொன்றியல் லஷின் கால்வாயில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

2 நாட்கள் முன்னர்
மாதகலில் விபத்து -முதியவர் ஒருவர்  உயிரிழப்பு

மாதகலில் விபத்து -முதியவர் ஒருவர் உயிரிழப்பு

2 நாட்கள் முன்னர்
ஆர்க்டிக் பிராந்தியத்திற்கான பாதுகாப்பு நிதியின் பலன்கள் இனுவிட் மக்களுக்குக் கிடைக்கும் என பிரதமர் மார்க் கார்னி உறுதிமொழி

நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் மார்க் கார்னி துருக்கி பயணம்

3 நாட்கள் முன்னர்
யாழில்  காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கு தள்ளுபடி

யாழில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கு தள்ளுபடி

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In