பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துசென்ற ஒருவரை இரு புறமும் வந்த வாகனங்கள் மோதித் தள்ளியதில் புளியங்குளத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் புளியங்குளம் எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நேற்று (07) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
வவுனியாவில் இருந்து அதிவேகமாக யாழ் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று குறித்த பாதசாரி கடவையூடாக வீதியைக் கடந்து சென்ற ஒருவரை மோதியுள்ளது.
இதன்போது ஹயஸ் வாகனத்தால் மோதித் தூக்கி எறியப்பட்ட நபரை யாழிலிருந்து வவுனியா நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த கார் மோதியதில் காரின் சக்கரங்கள் குறித்த நபரின் மீது ஏறியுள்ளது.
இச்சம்பவத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடுமையான காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











