EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மன்னாரில் காணி இன்றி துன்பப்படும் 35 குடும்பங்கள்

மன்னாரில் காணி இன்றி துன்பப்படும் 35 குடும்பங்கள்

ஆடி 8, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செட்டியார் கட்டையடம்பன் கிராமத்தில் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்ற 35 குடும்பங்களுக்கு இதுவரை குடியிருப்பதற்கான காணிகள் எவையும் வழங்கப்படவில்லை எனவும், இதனால் தாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் குறித்த செட்டியார் கட்டையடம்பன் கிராமம் அமைந்துள்ளது. பிரதான வீதியில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் குறித்த செட்டியார் கட்டையடம்பன் கிராமம் அமைந்துள்ளது.

குறித்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில், குறித்த கிராமத்தில் திருமணம் செய்து தனிக் குடும்பங்களாக சுமார் 35 குடும்பம் வசித்து வரும் நிலையில் குறித்த குடும்பங்கள் வசிப்பதற்கு நிரந்தர காணிகள் இல்லாத நிலை காணப்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த 35 குடும்பங்களும் தற்காலிக கொட்டில்களிலும் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வசித்து வருவதுடன் தாங்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

தமக்கு வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்வதாக இருந்தால் கூட காணி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமது கிராமத்தை சுற்றி போதுமான அளவு அரச காணிகள் காணப்படுகின்ற போதும், காடுகளை வெட்டி எமக்கான காணிகளை பெற்றுக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்கின்ற போது வனவள திணைக்கள அதிகாரிகள் இடையூரை ஏற்படுத்துவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாங்கள் தொடர்ச்சியாக கிராம அலுவலர், நானாட்டான் பிரதேச செயலாளர், திணைக்கள அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்த போதும் எங்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் அதிகாரிகளின் அசமந்த போக்கே எமது நிலைக்கு காரணம் என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும் குறித்த கிராமத்தில் பல வீடுகளில் யாரும் இன்றி பூட்டிய நிலையில் காணப்படுவதாகவும் ஆனால் காணிகள் இன்றி இக் கிராமத்தில் 35 குடும்பங்கள் வரை வசித்து வருகின்ற போதும் அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக அந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக எமது கிராமத்திற்குள் வெள்ள நீர் உற்செல்லாத போதும் எமது கிராமத்தை சுற்றி வெள்ள நீர் காணப்பட்டது.இதனால் நாங்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

எமது பிரச்சினைகளை உறிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எமக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குறித்த குடும்பத்தினர் தெரிவித்தனர்.

எனவே நாங்கள் அனைவரும் வேறு எந்த உதவியையும் கேட்கவில்லை.நாங்கள் குடி இருப்பதற்கு ஒரு துண்டு காணி கேட்கின்றோம். சொந்த காணி இருந்தால் மட்டுமே வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புடைய செய்திகள்

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு விளக்கமறியல்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு விளக்கமறியல்

ஆடி 8, 2026
பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்
அண்மைய செய்திகள்

பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

ஆடி 8, 2026
வடக்கு மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான புதிய திட்டம்
அண்மைய செய்திகள்

வடக்கு மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான புதிய திட்டம்

ஆடி 8, 2026
தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
அண்மைய செய்திகள்

தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

ஆடி 8, 2026
வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்
அண்மைய செய்திகள்

பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துசென்ற ஒருவரை மோதித்தள்ளிய இரு வாகனங்கள்

ஆடி 8, 2026
யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்
அண்மைய செய்திகள்

யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்

ஆடி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழிற்கு விஜயம் மேற் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்

யாழிற்கு விஜயம் மேற் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்

1 நாள் முன்னர்
வீதிகளில் ஹெட்போன் அணிந்து பயணிக்கும் பாதசாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வீதிகளில் ஹெட்போன் அணிந்து பயணிக்கும் பாதசாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

5 நாட்கள் முன்னர்
வாழைச்சேனை குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்

வாழைச்சேனை குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்

1 நாள் முன்னர்
மாதகலில் விபத்து -முதியவர் ஒருவர்  உயிரிழப்பு

மாதகலில் விபத்து -முதியவர் ஒருவர் உயிரிழப்பு

2 நாட்கள் முன்னர்
மன்னாரில் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை

மன்னாரில் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In