காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல்களில் 14க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவின் சப்ரா பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்ததாக அப்பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அது உள்கட்டமைப்பு வசதிகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஹமாஸ் அமைப்பின் ஆயுத உற்பத்தி நிலையத்தை குறிவைத்தே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.











