EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மொன்றியலில் அதிகரிக்கும் போதைப்பொருள் மரணங்கள்: பொதுச்சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கை!

மொன்றியலில் அதிகரிக்கும் போதைப்பொருள் மரணங்கள்: பொதுச்சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கை!

ஆடி 18, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் நகரில் ‘பென்டானில்’ (Fentanyl) மற்றும் அதைவிடப் பல மடங்கு வீரியமிக்க ‘கார்பென்டானில்’ (Carfentanil) முதலான ஆபத்தான
போதைப்பொருட்களின் பாவனையால், மரணங்கள் மற்றும் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் திடீரென அதிகரித்துள்ளதாகப் பொதுச்சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மொன்றியல் பிராந்திய பொதுச்சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் பதிவான
சந்தேகத்திற்கிடமான மரணங்களில், குறைந்தது 8 பேரின் மரணத்திற்குக் ‘கார்பென்டானில்’ என்ற ஆபத்தான போதைப்பொருளே காரணம் என ஆய்வகப் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நச்சியல் (Toxicology) பரிசோதனை முடிவுகள் வெளிவர தாமதமாவதால், இந்த மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இந்த ஆண்டின் ஜனவரி முதல் தற்போது வரை மாத்திரம் போதைப்பொருள் பாவனை காரணமாகப் பாதிக்கப்பட்ட 925 பேருக்கு அவசர மருத்துவக் குழுக்களால் ‘நெலோக்சோன்’ (Naloxone) என்ற நச்சுமுறி மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இது கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதிலும் பதிவான மொத்த அவசர சிகிச்சை விபரங்களை விட அதிகமாகும். தற்போது கண்டறியப்பட்டுள்ள ‘கார்பென்டானில்’ என்ற செயற்கை ஓபியாய்டு (Synthetic Opioid) வகை போதைப்பொருள், ஏற்கனவே ஆபத்தானதாகக் கருதப்படும் ‘பென்டானில்’ போதைப்பொருளை விட 100 மடங்கு அதிக வீரியம் கொண்டதாகும் எனவும் இதன் மிகச் சிறிய அளவே ஒருவரைக் கொல்லப் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்புச் சந்தையில் ‘பென்டானில்’ என்ற பெயரில் விற்கப்படும் போதைப்பொருள் கற்கள் மற்றும் தூள்களில், இந்த கார்பென்டானில்
கலக்கப்படுவதுடன், ‘மெடெட்டோமிடைன்’ (Medetomidine) எனப்படும் கால்நடை மயக்க மருந்தும், சில நேரங்களில் ‘பென்சோடியாசெபைன்கள்’ (Benzodiazepines) போன்ற மனஅமைதி மருந்துகளும் ஆபத்தான முறையில் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு
அண்மைய செய்திகள்

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு

ஆடி 21, 2026
ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்
அண்மைய செய்திகள்

ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

ஆடி 21, 2026
ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது
அண்மைய செய்திகள்

ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது

ஆடி 21, 2026
கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்
அண்மைய செய்திகள்

கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

ஆடி 21, 2026
மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!
அண்மைய செய்திகள்

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

ஆடி 21, 2026
இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!
அண்மைய செய்திகள்

இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!

ஆடி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க தலைமை அலுவலகத்தில் தீ பரவல்

பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க தலைமை அலுவலகத்தில் தீ பரவல்

4 நாட்கள் முன்னர்
மன்னாரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

மன்னாரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

6 நாட்கள் முன்னர்
கியூபெக்கில் அதிநவீன இராணுவ ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவவுள்ளதாகக் மத்திய அரசு அறிவிப்பு.

கியூபெக்கில் அதிநவீன இராணுவ ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவவுள்ளதாகக் மத்திய அரசு அறிவிப்பு.

5 நாட்கள் முன்னர்
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் விடுதி திறப்பு

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் விடுதி திறப்பு

7 நாட்கள் முன்னர்
“குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!

“குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In