EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பலாலி பொதுநோக்கு மண்டபத்தில் இருந்த குடிநீர் தாங்கியை  அகற்றிய பொலிஸார்

பலாலி பொதுநோக்கு மண்டபத்தில் இருந்த குடிநீர் தாங்கியை அகற்றிய பொலிஸார்

ஆடி 20, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் பலாலி சந்தியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில், இளைப்பாற, பொழுது போக்க வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக வலி.வடக்கு பிரதேச சபையினால், வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பலாலி பொலிஸார் அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர்.

அதேவேளை குறித்த இடத்தில் குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை வைத்தமை தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளரிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் அவற்றை மல்லாகம் நீதிமன்றில் ஒப்படைத்து , சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பலாலி பொலிஸார் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண சுற்றுலாத்துறையை மேம்படுத்த சுற்றுலா தளங்களில் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றை தினசரி கண்காணித்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் பலாலி பொது நோக்கு மண்டபம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் பாவனைக்காக வைக்கப்பட்டிருந்த, குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பொலிஸார் எடுத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கடந்த ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளாக பலாலி சந்தியில் , பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டம் நடாத்தினர். எதிர்வரும் ஞாயிறுகளிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அப்பகுதியில் கொட்டகை அமைக்க பொலிஸார் தடை விதித்துள்ள நிலையில் , போராட்டக்காரர்கள் குறித்த பொது நோக்கு மண்டபத்தில் இளைப்பாறுவதுடன் , மதிய உணவுகளை அந்த மண்டபத்தில் இருந்து உட்கொள்வதுடன் , அங்கிருக்கும் குடிநீர் தாங்கி மற்றும் , தற்காலிக மலசல கூடத்தினையே பயன்படுத்தி வந்துள்ளனர். அதனாலேயே பலாலி பொலிஸார் அவற்றை அங்கிருந்து அகற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வயோதிப பெண்கள் , முதியவர்கள் என போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையில் , அங்கிருந்த மலசல கூடம் மற்றும் தண்ணீர் தாங்கி என்பவற்றை பலாலி பொலிஸார் எடுத்து சென்றமை அப்பகுதி மக்களிடம் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு
அண்மைய செய்திகள்

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு

ஆடி 21, 2026
ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்
அண்மைய செய்திகள்

ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

ஆடி 21, 2026
ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது
அண்மைய செய்திகள்

ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது

ஆடி 21, 2026
கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்
அண்மைய செய்திகள்

கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

ஆடி 21, 2026
மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!
அண்மைய செய்திகள்

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

ஆடி 21, 2026
இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!
அண்மைய செய்திகள்

இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!

ஆடி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று  நடைபெற்றது

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது

14 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவில் வீடமைப்புத் திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

வவுனியாவில் வீடமைப்புத் திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

4 நாட்கள் முன்னர்
கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம் – கடற்தொழில் அமைச்சர்

கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம் – கடற்தொழில் அமைச்சர்

3 நாட்கள் முன்னர்
மன்னாரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

மன்னாரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

6 நாட்கள் முன்னர்
இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!

இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!

10 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In