EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மொன்றியலில் சர்வதேச மாணவர்கள் வீதிப் போராட்டம் மற்றும் பேரணி

மொன்றியலில் சர்வதேச மாணவர்கள் வீதிப் போராட்டம் மற்றும் பேரணி

ஆடி 23, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சர்வதேச மாணவர்கள் இன்று மொன்றியல் நகரில் வீதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததுடன், கியூபெக் குடியகல்வு அமைச்சகத்தின்
அலுவலகம் நோக்கிப் பேரணியாகவும் சென்றனர்.

கியூபெக் மாகாணத்தில் செயற்பட்டு வந்த நான்கு முன்னணி தனியார் கல்லூரிகளின் இயக்க அனுமதிப்பத்திரங்களை (Permits) மாகாண அரசு
திடீரென ரத்து செய்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு கல்வி பயிலும் நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொன்றியலில் அமைந்துள்ள ‘கொலேஜ் சுப்பீரியர் டி மொன்றியல்’ (Collège supérieur de Montréal), ‘கொலேஜ் சுப்பீரியர் டி ஷெர்புரூக்’ (Collège supérieur de Sherbrooke), ‘கொலேஜ் ஹெர்சிங்’ (Collège Herzing) மற்றும் ‘கொலேஜ் டி டெக்னாலஜி வெரிடாஸ்’ (Collège de technologie Veritas) ஆகிய நான்கு அரசு மானியம் பெறும் தனியார் கல்லூரிகளின் அனுமதிகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், படிப்பை முடிக்கும் தறுவாயில் இருந்த சர்வதேச மாணவர்கள் பலரது எதிர்காலமும், நாட்டில் தங்கியிருப்பதற்கான விசா நிலையும்
இதனால் கேள்விக்குறியாகியுள்ளது. படிப்பை நிறைவு செய்ய சில வாரங்களே எஞ்சியிருந்த நிலையிலும், இறுதிப் பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்திலும் இந்தத் திடீர் முடிவு கியூபெக் அரசால் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மாணவர்கள் வேதனை
தெரிவித்துள்ளனர்.

மாற்று வழியில் தங்கள் படிப்பை முடித்துக் கொள்வதற்கு உடனடியாக வழிவகை செய்யுமாறு, சர்வதேச மாணவர்கள் கியூபெக் அரசை தற்போது கோரியுள்ளனர்.
நாட்டின் கல்வி விசா விதிகளின்படி, மாணவர் ஒருவர் தங்கியிருப்பதற்கு அவர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முழுநேரக் கல்வி பயில்வது அவசியமாகும்.

தற்போது கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், தமக்கு வேறு கல்லூரிகளில் உடனடியாகச் சேர்க்கை வழங்கி, குடியகல்வு அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க, கியூபெக் அரசு உதவ வேண்டும் என சர்வதேச மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, தனியார் கல்விச் சட்டங்களின்படி அமைக்கப்பட்ட நிபந்தனைகளை இக் கல்லூரிகள் சரியாகப் பூர்த்தி செய்யத் தவறியமையினாலேயே அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிக்கப்படவில்லை என கியூபெக் கல்வி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் பிரையன் செயிண்ட்- லூயிஸ் (Bryan St-Louis) தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட வேறு கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படிப்பைத் தொடர நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கான கல்விக்கட்டண விலக்குகள் குறித்து பரிசீலிக்கப்படுவதாகவும் அமைச்சு உறுதியளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்கில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, அபூர்வ வகை தோல் புற்றுநோய்
அண்மைய செய்திகள்

கியூபெக்கில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, அபூர்வ வகை தோல் புற்றுநோய்

ஆடி 23, 2026
நவீன நீர் இடர் மீட்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்யுமாறு, மொன்றியல் மாநகரசபையை வலியுறுத்தும் தீயணைப்பாளர்கள் சங்கம்
அண்மைய செய்திகள்

நவீன நீர் இடர் மீட்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்யுமாறு, மொன்றியல் மாநகரசபையை வலியுறுத்தும் தீயணைப்பாளர்கள் சங்கம்

ஆடி 23, 2026
மட்டு மாநகர சபையின் தவறை சுட்டி காட்டியதற்கு பல விதத்தில் அச்சுறுத்தல் – அந்தனிசில் ராஜ்குமார்
அண்மைய செய்திகள்

மட்டு மாநகர சபையின் தவறை சுட்டி காட்டியதற்கு பல விதத்தில் அச்சுறுத்தல் – அந்தனிசில் ராஜ்குமார்

ஆடி 22, 2026
யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு
அண்மைய செய்திகள்

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு

ஆடி 22, 2026
மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி
அண்மைய செய்திகள்

மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி

ஆடி 22, 2026
தேவேந்திர முனை கந்தர பகுதி வீடொன்றில் துப்பாக்கி சூடு
அண்மைய செய்திகள்

தேவேந்திர முனை கந்தர பகுதி வீடொன்றில் துப்பாக்கி சூடு

ஆடி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மன்னார் பாடசாலையொன்றில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

மன்னார் பாடசாலையொன்றில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

9 மணத்தியாலங்கள் முன்னர்
வல்வெட்டித்துறையில் சிலை திறப்புக்கு இடைக்கால தடை உத்தரவு

வல்வெட்டித்துறையில் சிலை திறப்புக்கு இடைக்கால தடை உத்தரவு

10 மணத்தியாலங்கள் முன்னர்
எல்நினோ தாக்கம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

எல்நினோ தாக்கம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

1 நாள் முன்னர்
படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு – வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணை

படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு – வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணை

2 நாட்கள் முன்னர்
வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!

வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In