EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
சுற்றுச்சூழலை அழித்து அபிவிருத்தியை அடைய முடியாது – ஆளுநர் நா.வேதநாயகன்

சுற்றுச்சூழலை அழித்து அபிவிருத்தியை அடைய முடியாது – ஆளுநர் நா.வேதநாயகன்

ஆடி 24, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

முதலீடுகளையும் கைத்தொழில்துறை வளர்ச்சியையும் நாம் மனதார வரவேற்கின்றோம், ஆனால், சுற்றுச்சூழலை அழித்து அல்லது அதற்கு ஊறுவிளைவித்து எந்தவொரு அபிவிருத்தியையும் நாம் நிலைத்து நிற்கும்படி அடைய முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட கழிவு முகாமைத்துவ அனுமதி நடைமுறைகள் தொடர்பான விசேட விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை சுற்றாடல் தொழில் வல்லுநர்கள் நிறுவனம் மற்றும் மனேஜ்மன்ட் க்ளப் ஆகியவை இணைந்து இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தொடக்கவுரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

தொழிற்துறையை வளர்க்க வேண்டும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அதற்காக எமது மாகாண சபையும் முழுமையான ஒத்துழைப்புக்களையும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. தற்போது வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்குச் சாதகமான சூழல் நிலவுவதனால், முதலீட்டாளர்களும் அதிகளவில் வருகை தருகின்றார்கள்.

இங்கு நாம் மிக முக்கிய விடயத்தைக் கவனிக்க வேண்டும். முதலீடுகளையும், வேலை வாய்ப்புக்களை வழங்கும் தொழிற்சாலைகளையும், கைத்தொழில்துறை வளர்ச்சியையும் நாம் மனதார வரவேற்கின்றோம்.

அதற்கான முழுமையான ஆதரவையும் வழங்குகின்றோம். ஆனால், எமது சுற்றுச்சூழல் தொடர்பில் கூடுதல் கரிசனையுடனேயே இவற்றின் வளர்ச்சியை நாம் ஆதரிக்கின்றோம். சுற்றுச்சூழலை அழித்து அல்லது அதற்குத் தீங்கு மற்றும் ஊறுவிளைவித்து எந்தவொரு அபிவிருத்தியையும் நாம் நிலைத்து நிற்கும்படி அடைய முடியாது.

எனவே, இந்த விழிப்புணர்வுக் கலந்துரையாடல் மிக ஆரோக்கியமானதும் முக்கியமானதுமாகும். சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட கழிவு முகாமைத்துவ அனுமதி நடைமுறைகள் என்பன மிக முக்கியமானவை.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றாடல் தொடர்பான சட்டங்களையும் நீங்கள் அறிந்து கொண்டு இவற்றைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு, நடைமுறையில் அவற்றைப் பின்பற்றுவதன் ஊடாகவே சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கைக் குறைத்துக்கொள்ள முடியும் என மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக் – லோங்வே மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மோதல் — பொலிஸார் தீவிர விசாரணை!
அண்மைய செய்திகள்

கியூபெக் – லோங்வே மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மோதல் — பொலிஸார் தீவிர விசாரணை!

ஆடி 25, 2026
மொன்றியலில் சிறுவர் பாதுகாப்பு நிலைய பராமரிப்பில் இருந்த 3 சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மொன்றியலில் சிறுவர் பாதுகாப்பு நிலைய பராமரிப்பில் இருந்த 3 சிறுவர்கள் உயிரிழப்பு

ஆடி 25, 2026
இலங்கையில் மீண்டும் ஒருபோதும் இனக்கலவரங்கள் உருவாகக் கூடாது – சோசலிச இளைஞர் சங்கம்
அண்மைய செய்திகள்

இலங்கையில் மீண்டும் ஒருபோதும் இனக்கலவரங்கள் உருவாகக் கூடாது – சோசலிச இளைஞர் சங்கம்

ஆடி 24, 2026
யாழ்ப்பாண பழைய கச்சேரி , மந்திரிமனை ஆகியவற்றை பாதுகாக்க நடவடிக்கை
அண்மைய செய்திகள்

யாழ்ப்பாண பழைய கச்சேரி , மந்திரிமனை ஆகியவற்றை பாதுகாக்க நடவடிக்கை

ஆடி 24, 2026
வடக்கில் இருந்து குறைப்பாடுகளுடன் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் தொடர்பில் அறியத்தரவும்  – சூ.விமலேஸ்வரன்
அண்மைய செய்திகள்

வடக்கில் இருந்து குறைப்பாடுகளுடன் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் தொடர்பில் அறியத்தரவும் – சூ.விமலேஸ்வரன்

ஆடி 24, 2026
யாழில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு
அண்மைய செய்திகள்

யாழில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

ஆடி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

4 நாட்கள் முன்னர்
அல்பேர்ட்டா பொதுவாக்கெடுப்பு: தற்காலிக குடியிருப்பாளர்களின் சேவைகள் பாதிக்கப்படும் என அச்சம்!

அல்பேர்ட்டா பொதுவாக்கெடுப்பு: தற்காலிக குடியிருப்பாளர்களின் சேவைகள் பாதிக்கப்படும் என அச்சம்!

5 நாட்கள் முன்னர்
உள்ளூராட்சி மன்றங்கள் பொதுச் சுகாதார வசதிகளை  கண்காணிக்க வேண்டும் –  கலாநிதி ஜே.விவேகானந்தன் கோரிக்கை

உள்ளூராட்சி மன்றங்கள் பொதுச் சுகாதார வசதிகளை கண்காணிக்க வேண்டும் – கலாநிதி ஜே.விவேகானந்தன் கோரிக்கை

4 நாட்கள் முன்னர்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையே விசேட  சந்திப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையே விசேட சந்திப்பு

6 நாட்கள் முன்னர்
மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி

மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In