இலங்கையில் சீரற்ற வானிலை நிலவுவதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய (04) தினம் மூடப்படும் என மத்திய மாகாண கல்வி செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.











