EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
டாஸ்மாக்கில் கூடுதல் விலை: வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக்கில் கூடுதல் விலை: வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆவணி 8, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் தொகைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், நுகர்வோர் அளிக்கும் புகார்களின் மீது காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், மாதவரம் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தனது மனுவில், ரசீது இல்லாமல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறையும் அமுலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

மேலும், 2022-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு வரை சட்டவிரோதமாகக் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையைச் சம்பந்தப்பட்ட பணியாளர்களிடமிருந்து வசூலித்து அரசுக்குச் செலுத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராகப் பணிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுபானங்களுக்கு ரசீது வழங்கக் கோரி அனைத்துக் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் ரசீது வழங்குவதில் நடைமுறைச் சிரமங்கள் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி, “ஒரு சாதாரண சூப்பர் மார்க்கெட்டில் டூத் பேஸ்ட் வாங்கினால் கூட ரசீது தரும் நிலையில், மாநில அரசுக்குப் பெருமளவில் வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் இருக்க முடியும்? கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஏன் காவலர்களைப் பணியமர்த்தக் கூடாது?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து தீர்ப்பளித்த நீதிபதி, அரசு வெளியிட்ட சுற்றறிக்கையைப் பின்பற்றாமல் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நுகர்வோர் உடனடியாகக் காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றும், பெறப்படும் புகார்கள் மீது தாமதமின்றி உடனே வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் அளித்த புகார் மீது முறையான விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அவசர அரசாணை வெளியீடு!
உலகம்

குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அவசர அரசாணை வெளியீடு!

ஆவணி 8, 2026
கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது: வங்கிகளுக்கு RBI அதிரடி அறிவுறுத்தல்!
உலகம்

கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது: வங்கிகளுக்கு RBI அதிரடி அறிவுறுத்தல்!

ஆவணி 8, 2026
ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை ஏன் மூடக்கூடாது? – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!
உலகம்

ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை ஏன் மூடக்கூடாது? – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

ஆவணி 8, 2026
இந்திய – சீன எல்லைப் பிரச்சினை: பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண இருநாடுகளும் ஒப்புதல்!
உலகம்

இந்திய – சீன எல்லைப் பிரச்சினை: பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண இருநாடுகளும் ஒப்புதல்!

ஆவணி 8, 2026
துருக்கி, பாகிஸ்தான் உடனான காகித ஒப்பந்தம் சவுதிக்கு பாதுகாப்பைத் தராது – ஈரான் கடும் விமர்சனம்!
உலகம்

துருக்கி, பாகிஸ்தான் உடனான காகித ஒப்பந்தம் சவுதிக்கு பாதுகாப்பைத் தராது – ஈரான் கடும் விமர்சனம்!

ஆவணி 8, 2026
சவுதி – பாகிஸ்தான் – துருக்கி வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
உலகம்

சவுதி – பாகிஸ்தான் – துருக்கி வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!

ஆவணி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த  பாதுகாப்பு

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு

16 மணத்தியாலங்கள் முன்னர்
புளியங்குளம் விபத்து சாரதி ஐஸ் பயன்படுத்தியமை உறுதி

புளியங்குளம் விபத்து சாரதி ஐஸ் பயன்படுத்தியமை உறுதி

4 நாட்கள் முன்னர்
கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!

கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!

4 நாட்கள் முன்னர்
ரினோப்ரியாநீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையில் மோதல்

ரினோப்ரியாநீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையில் மோதல்

14 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான  அடிக்கல் நாட்டல்

கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டல்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In