நீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையிலும் இன்று (07) மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலில் காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதன்படி சிறைச்சாலையில் மோதலை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











