முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் நகரில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் எண்ணக் கருவில் உருவான கிளீக் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக அத்தம வேலைத்திட்டத்தில் ஒட்டுசுட்டான் பகுதியில் பாரிய சிரமதானப் பணி இன்று இடம்பெற்றது
இதன்போது ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தை அண்டிய ஒட்டுசுட்டான் நகர் பகுதி வீதி ஓரங்கள் வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செ. திலகநாதன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ. நிசாந்தன் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப்பணிப்பாளர் உள்ளிட்ட அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக ஊழியர்கள் ஏனைய திணைக்களங்கள் சார் ஊழியர்கள் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிசார் 592 ஆவது படைப்பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட இராணுவத்தினர் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினர் தொழிலதிபர்கள் வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டார்கள்.











