தூய்மையான சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதையும், சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் “அத்தம” தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது.
“அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்” என்ற இலக்குடன், அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுமக்களின் கூட்டுப் பங்களிப்பில் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தின் இன்றைய நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாணக் கோட்டை வெளிப்புறப் பகுதியில் ஆரம்பமாகியது.
இதன்போது, யாழ்ப்பாண கோட்டையினைச் சுற்றிய சுமார் 2.2 கிலோமீற்றர் நீளப்பரப்பில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட.ன.
இன்றைய தூய்மைப் பணியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண மாநகர சபையினர், பொலிஸ், இராணுவம், விமான படை, கடற்படை , யாழ்ப்பாண மாவட்ட சாரணர்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலக J/81 கிராம அலுவலர் பிரிவு பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் பங்குபற்றியதுடன், Save a Life, Sevalanka Foundation, World Vision என்பன அனுசரணை வழங்கினார்கள்.
மேலும், இதே சம நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலக ரீதியாகவும் ஒரு நிகழ்வும் மற்றும் மாவட்டத்தின் அனைத்து கிராம சேவக பிரிவுகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











