இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,033 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அதிகரித்துள்ளது.
இதன்படி டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 47,136 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
கொழும்பு மாவட்டத்தை பொறுத்த வரையில் 17,679 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,298 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 18,922 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் நேற்றைய தினம் வரையில் 3,686 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த மாதத்தை பொறுத்த வரைக்கும் 29,973 பேர் டெங்கு நோயாளர்களாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.











