கனடாவில் நடைபெற்ற மூன்று இடைத்தேர்தல்களிலும் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் லிபரல் கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதன் மூலம் நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சி தனது குறுகிய பெரும்பான்மையை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றம் மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் இந்த வெற்றி பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கத்திற்கு முக்கிய அரசியல் பலமாக பார்க்கப்படுகிறது.











